தாயை தரக்குறைவாக பேசிய தம்பியை கழுத்தை அறுத்து கொன்ற அண்ணன்கள் : இதயத்தை உலுக்கும் சம்பவம்!!

290

நாமக்கல்…..

நாமக்கல் மாவட்ட மகுமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். ,வர் ஆனங்கூர் பிரிவில் மதுபான பார் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு கார்த்தி, அஷோக், குரு என 3 மகன்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று மூன்றாவது மகன் குரு பாரில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்தி, அசோக் ஆகியோர் குருவை அடித்துள்ளனர். இதைப் பார்த்த ஆனந்தன், தடுக்கச் சென்றுள்ளார்.

அப்பொழுது ஆனந்தனை கீழே தள்ளிவிட்டு குருவை கற்களால் சரமாரியாக தாக்கியதோடு விடாமல், அங்கிருந்த மதுபான பாட்டிலை உடைத்து குருவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

 கழுத்தறுப்பட்ட குரு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் விரைந்து வந்து குருவை மீட்டு குமாரபாரளையம் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். தீவிர சிகிசிச்சை அளித்தும் பலனளிக்காத நிலையில் குரு உயிரிழந்தார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் குரு, தனது தாய் பூங்கொடியை தகாத வார்த்தைகளால் பேசியதால் ஆத்திரமடைந்த அவரது அண்ணன்கள் குருவிடம் இதுகுறித்து கேட்டதால் தகராறு முற்றி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள கார்த்தி மற்றும் அசோக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உடன்பிறந்த தம்பியை அண்ணன்களே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.