தாய் செய்த செயலால் துடிதுடித்து உயிரிழந்த 7 மாத குழந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

353

ஹைதராபாத்….

இந்தியாவில் பெண் ஒருவர் சானிடைசரை பயன்படுத்தி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவத்தில் ஏழு மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

ஹைதராபாத்தின் ஹயாத்நகரில் வசித்து வருபவர் சுவர்ணா. இவருக்கு ஏழு மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சுவர்ணா தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் தனது குழந்தை மீதும் தன் மீதும் சானிடைசரை ஊற்றி தீ வைத்துள்ளார்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவத்தில் சுவர்ணா அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து கொண்டார். ஆனால் ஏழு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸ் நடத்திய விசாரணையில் கணவர் வேலையில்லாமல் இருந்து வந்ததால் இருவருக்கிடையில் பிரச்சனைகள் வெடித்துள்ளது. இந்நிலையில் ஜனவரி 11 ஆம் திகதி அன்று சண்டை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.

இதனால் ஏற்பட்ட கோபத்தால் அவரது கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அவர் வெளியே சென்ற நேரத்தில் சுவர்ணா குழந்தையை இணைத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் மருத்துவமனை வெளியிட்ட அறிவிக்கையில், குழந்தை 70 சதவிதமும், தாய் சுவர்ணா 40 சதவிதமும் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.