தாய் தந்தையரை தேடும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்!!

334

தாய் தந்தையரை தேடும்……..

விடுமுறையில் இலங்கை, இந்தியா, ஆபிரிக்க நாடுகளுக்கு பயணம் செல்லும் சுவிஸ் நாட்டு தம்பதியர் அந்தந்த நாடுகளில் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பார்கள்.

அவர்களை தங்கள் நாட்டிற்கு அழைத்து வந்து தங்கள் நாட்டில் தங்கள் பிள்ளைகள் போல் வளர்த்து வருவது தொடர்கதையாக இடம்பெற்று வரும் சம்பவம் ஆகும்.

எனினும் குழந்தைகள் வளர்ந்த பிறகு அவர்களின் பூர்வீகத்தை தேடி பயணிப்பதும் தொடர்கதை ஆகும்.

அதன்படி 1973 தொடக்கம் 2002 வரை 80 குழந்தைகள் இலங்கையிலிருந்து சுவிசுக்கு தத்துக்குடுப்பட்டுருக்கிறார்கள்.

அப்பிடி தத்து கொடுக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த ஒரு பிள்ளை தன் பெற்றோரை தேடுவதை பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.