திண்டுக்கல்….
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே குறுக்களையன்பட்டியில் வசித்து வருபவர் செளந்தரம், அவரது மகன் செல்வம். இருவரும் அருகே உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் சௌந்தரமும் அவரது மகன் செல்வமும் இணைந்து தோட்டத்து வேலையை முடித்துவிட்டு அங்கேயே படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலரால் தாக்கப்பட்டு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அதிகாலை செல்வத்தின் மனைவி தொலைபேசியில் அழைத்தபோது, போன் சுவிட் அப் என்று வந்ததால், சந்தேகமடைந்த மனைவி தோட்டத்து வீட்டிற்கு நேராக வந்து பார்த்துபோது தாய் மகன் இருவரும் முகம் சிதைந்த நிலையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. பின்னர் இது குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இவர்களின் தோட்ட வீட்டில் தேங்காய் பரிப்பதற்காக வந்த நபர் மரத்திலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்துலேயே உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
அதற்கு அவர்கள் பணம் கேட்டு கொடுக்காததால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார், வேறு ஏதும் காரணங்கள் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.