புதுமாப்பிள்ளை…
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பெங்களூரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் திருமணத்துக்காக மணமகன் மணமகள் குடும்பத்தினர் சொந்த ஊரான அம்பாசமுத்திரத்திற்கு வந்துள்ளனர். வெளியூரிலிருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு கொரோணா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை அவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் நடந்து முடிந்த சில நிமிடங்களில் மண்டபத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது.
அதில், வந்தவர்கள் மணமகன் மற்றும் அவருடைய தாய், தந்தை, அக்கா ஆகியோருக்கு கொரோனா உறுதியாகி இருக்கின்றது என்றும் ,அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறிய ஆம்புலன்சில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
மேலும் திருமணத்திற்கு வந்தவர்களுக்கும், மணமகள் வீட்டினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கின்றது. முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்பதால் அவர்களை தனியாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
திருமணம் முடிந்த சில நேரத்தில் கணவன் மனைவி பிரிக்கப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த திருமணத்தின் மூலம் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கும் என்று பீதி கிளம்பியுள்ளது.