இந்தியா…
இந்தியாவில் தாலி கட்டிய மனைவியை ரூ 500க்கு விற்ற கணவனின் செயல் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் தான் இந்த கொடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் அதிகாரி மதன்லால் கட்வர்சா கூறுகையில், 21 வயதான இளம்பெண் எங்களிடம் வந்து ஒரு புகாரை கொடுத்தார்.
அதில் இரு தினங்களுக்கு முன்னர் இரவு 9 மணிக்கு லக்கி ஹொட்டலுக்கு நானும் என் கணவரும் சென்றோம்.
அப்போது அங்கு வந்த நபர் என் கணவரிடம் ரூ 500 கொடுத்தார், இதையடுத்து என்னை அந்த நபருக்கு விற்றுவிட்டார்.
பின்னர் அவர் என்னை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று சீ.ர.ழித்தார் என தெரிவித்துள்ளார்.
புகாரையடுத்து குற்றவாளியான சோனு சர்மாவை பொலிசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் காப்பகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இச்சம்பவத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.