திடீரென வெடித்தது: சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிய மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!!

364

தேசாய்….

கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. இதற்காக மாணவர்கள் செல்போனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்த மாணவி, போன் வெடித்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள சேட்டேசன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்ரத்தா தேசாய் (17). பிளஸ் 2 மாணவியான இவர், கடந்த புதன்கிழமை செல்போனை சார்ஜ் போட்டபடி பேசிக்கொண்டிருந்தார். அப்போது செல்போன் திடீரென வெடித்துச் சிதறியது.

இதில், தலை, முகம் உள்ள்ட்ட பகுதிகள் படுகாயமடைந்த மாணவியை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

’செல்போனில் சார்ஜ் போட்டபடி உறவினரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, போன் பேட்டரி திடீரென்று வெடித்தது. இதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

வீட்டின் கதவு தீப்பிடித்து கருநிறத்துக்கு மாறிவிட்டது’ என்று ஷ்ரத்தாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை நடத்தாமல் அவரது உடலை குடும்பத்தினர் எரித்துவிட்டதை அடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.