திடீர் கோடீஸ்வரர் ஆன சலூன் கடைக்காரர்… அனுபவிக்கும் முன் நடத்த விபரீதம்!!

323

கேரளா…………….

கேரளாவில் முடிதிருத்தும் தொழிலாளி ஒருவர் திடீர் கோடீஸ்வரர் ஆன நிலையில், அதனை அனுபவிக்க முடியாமல் கொரோனா உயிரை பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்திலுள்ள மாளா நகரத்தைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் அங்கு சிறிய முடிதிருத்தும் கடையினை வைத்து அதில் வரும் வருமானத்தினை வைத்து தனது வாழ்க்கையை கழித்து வந்துள்ளார்.

இவர் தனது மனைவி, மற்றும் மகனுடன் வாழ்ந்த நிலையில், லொட்டரி வாங்கும் பழக்கத்தினை வழக்கமாக வைத்துள்ளார். இதில் சிறிதும், பெரிதுமான பரிசுகளை அவ்வப்போது பெற்றுக்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கொரோனாவின் தாக்கத்தினால் லாக்டவுன் போடப்பட்டதால், இவரது சலூன் கடையும் அடைக்கப்பட்டது. இதனால் அன்றாட வாழ்க்கைக்கே சிரமத்தினை சந்தித்துள்ளது.

லாக்டவுன் முடிந்து கடந்த மார்ச் மாதம் கடை திறக்கப்பட்டதும், கேரள அரசின் தலா ஒரு கோடி ஐந்து பேருக்கு என்ற லொட்டரி சீட்டினை ரூ.200 கொடுத்து அப்துல் காதலர் வாங்கியுள்ளார்.

இதில் பரிசு பெறும் ஐந்துபேரில் அப்துல் பெயர் வந்த நிலையில், லொட்டரி சீட்டினை வங்கியில் ஒப்படைத்துவிட்டு, பணத்திற்காக காத்திருந்துள்ள நிலையில், கொரோனா தொற்று இவரைத் தாக்கியுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வாழ்நாள் முழுவதும் கஷ்டத்துடன் இருந்த அப்துல் காதர், மில்லியனராக வாழலாம் என்று நினைத்த போது கொரோனா அவரது உயிரைப் பறித்துள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.