சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான கிவியில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளன.இதில் நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், போலிக் அமிலங்கள், சி மற்றும் ஈ விட்டமின்கள் , கரோடனாய்ட் , ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் மினெரல்ஸ் நிரம்பியுள்ளது.
தினமும் இரண்டு கிவி பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் பல நன்மைகளை பெறலாம்.கிவி பழத்திலுள்ள நார்ச்சத்துக்கள் ஜீரண சக்தியை மேம்படுத்துவதுடன், உடலிலிருந்து நச்சுப்பொருட்களை வெளியேற்றவும் செய்கிறது.
இதிலுள்ள Actinidain எனும் என்சைம் உணவில் உள்ள புரதங்களை உடைத்து எளிதான ஜீரணத்திற்கு வழிவகுக்கிறது.இதிலுள்ள நார்ச்சத்துக்களும் பொட்டாசியமும் இதய நோய்கள் வராமல் காக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று கிவி பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்த உறைவு 18 சதவிகிதம் குறைவதாக கூறப்படுகிறது.
கிவியில் இருக்கும் விட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் சரும சீர்கேட்டை எதிர்க்கிறது.கிவி சாப்பிடுவதால் வயதாகும் தன்மை குறைந்து சுருக்கங்கள் இன்றி உடல் இளமையை தக்க வைக்கலாம்.
கிவி பழத்தில் இருக்கும் ஒருவகையான பிளவனாய்டு மற்றும் கரோடனாய்ட் போன்றவை புற்று நோய் ஆபத்திலிருந்து நம் உடலைக் காக்கிறது.இதில் உள்ள தாவர ஊட்டச்சத்துக்கள் ஆக்சிஜென் தொடர்பான சேதாரங்களிலிருந்து நமது டி என் ஏ க்களை காக்கிறது என்பது மிக அதிசயமான உண்மை.
இவ்வாறு டிஎன்ஏ-க்களை காப்பதன் மூலம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது கிவி பழம்.கிவியில் உள்ள விட்டமின் சி உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் வராமல் தடுக்கிறது.சளி காய்ச்சல் இருமல் போன்ற நோய்கள் உடலினுள் வரவிடாமல் தடுக்கிறது.
கிவி பழத்தில் உள்ள குறைவான கிளைசெமிக் இன்டெக்ஸ்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அவ்வளவு சீக்கிரமாக அதிகரிப்பதில்லை.ஜீரண நேரத்தில் மிக குறைவான அளவே சர்க்கரையை உடலுக்குள் ஏற்றுகிறது, ஆகவே நீரிழிவு நோயாளிகள் கிவி பழத்தை பயமின்றி எடுத்துக் கொள்ளலாம்.
கண்பார்வை அதிகரிக்கவும் மேம்படவும் கிவி பழம் பெருமளவில் உதவி செய்கிறது.இதில் அதிக அளவில் உள்ள லுடீன் எனும் பொருள் கண்பார்வைக்கு பெரிதும் உதவி செய்கிறது, விட்டமின் ஏ கண்பார்வை சிறக்க உதவி செய்கிறது.