பிரித்தானியாவில்..
பிரித்தானியாவில் சிறுநீரக கற்கள் காரணமாக இளம்பெண் ஒருவர் உடல் மெலிந்து, நாளுக்கும் 21 மணி தூங்கும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தென் யார்க்ஷயரின் டான்காஸ்டரைச் சேர்ந்த எம்மா டக் (Emma Tuck) என்பவரே மிக மோசமான இந்த நிலையில் உள்ளார். வெறும் 21 வயதேயான அவர் தற்போது சிறப்பு சிகிச்சையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இரண்டு பக்கத்திலும் சிறுநீரக கற்களால் பாதிப்புக்குள்ளான அவரால் தற்போது சரிவர சாப்பிட முடியவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் நாளுக்கும் 21 மணி நேரமும் படுக்கையிலேயே படுத்தபடி உள்ளார்.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் வரையில் எம்மா சாதரண நிலையிலேயே இருந்துள்ளார். மட்டுமின்றி, லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் பட்டம் பயின்றும் வந்தார்.
திடீரென்று ஒருநாள் சிறுநீரக கற்களுக்கான சிகிச்சையை நாடிச்சென்ற எம்மாவுக்கு, அது சிறுநீர் தொற்றாக இருக்க வாய்ப்புகள் அதிகம் எனவும், எம்மா இளவயது என்பதால் அவருக்கு சிறுநீரக கற்களுக்கான வாய்ப்புகள் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் ஸ்கேன் செய்து பார்த்ததில், எம்மாவுக்கு சிறுநீரக கற்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் ஒருபக்க சிறுநீரக கல் வெளியேற்றப்பட்ட நிலையில், இன்னொன்று அவரது சிறுநீரகத்தில் சிக்கிக்கொண்டது.
இதனையடுத்து குழாய் மூலம் அந்த இன்னொரு கல்லையும் மருத்துவர்கள் அப்புறப்படுத்தினர். அந்த குழாயானது சிலவார காலம் அவருக்குள் இருந்துள்ளது.
ஆனால் அதன் பின்னரே எம்மா அவதிப்படத் தொடங்கினார். அவருக்கு அளித்த மருத்துவ சிகிச்சை காரணமாக அவரது வயிறு ஸ்தம்பித்தது. மட்டுமின்றி சாப்பிட முடியாமல் அவதிப்பட்டார்.
இதனால் உடல் எடை அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு 34 கிலோவாக குறைந்தது. இதனையடுத்து மீண்டும் சிகிச்சையில் இருந்து வந்தார் எம்மா. கடந்த மூன்றாண்டுகளாக அவதிப்பட்டுவரும் எம்மாவுக்கு gastric pacemaker கருவியை பொருத்தினால் பலன் கிடைக்கும் என மருத்துவர்கள் தரப்பு பரிந்துரைத்துள்ளது.
NHS-ல் இதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் தனியாக பொருத்திக் கொள்ள 30,000 பவுண்டுகள் வரை செலவாகும் என கூறப்படுகிறது. மட்டுமின்றி லண்டனுக்கு சென்றால் உரிய சிகிச்சைக்கு வாய்ப்பிருக்கிறது.
ஆனால் அவரால் படுக்கையை விட்டு எழுந்து நடமாடும் அளவுக்கு உடம்பில் தெம்பில்லை என்பதால் அதுவும் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது எம்மாவின் நண்பர்களும் அவரது உறவினர்களும் சிறப்பு சிகிச்சைக்கான பணம் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.