திருடனின் மனிதநேயம்…..
பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் வீடு ஒன்றுக்கு உணவு வழங்குவதற்காக நபர்( delivery boy ) ஒருவர் சென்றுள்ளார். உணவு டெலிவரி செய்துவிட்டு தனது வாகனத்தை எடுக்க வந்த போது பைக்கில் வந்த இருவர் அவரை வழி மறித்தனர் .
பைக்கில் இருந்து இறங்கி கத்தியை காட்டி மிரட்டிய திருடர்கள் அவரிடமிருந்த பொருட்களையும் கேட்டு மிரட்டினர் .அவர்கள் கேட்டபடியே அனைத்து பொருட்களையம் அவர்களிடம் கொடுத்துள்ளார்.
திருடர்களின் இச்செயலால் அதிர்ச்சியடைந்த குறித்த நபர் துக்கம் தங்க முடியாமல் கதறி அழுதுள்ளார். இதனைப் பார்த்த திருடர்கள் அனைத்து பொருட்களையும் திருப்பி அவரிடமே கொடுத்து விட்டு ,அவருக்கு ஆறுதலாகஅவரை கட்டி அனைத்து விட்டு சென்றுள்ளனர்.