1000 கி.மீ சைக்கிளில்..
இந்தியாவில் திருமணத்திற்காக கொரோனா ஊரடங்கை மீறி 1000 கி.மீ தொலைவில் உள்ள சொந்த ஊருக்கு சைக்கிளில் சென்ற மணமகன் பொலிசாரிடம் சிக்கி தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
24 வயதான தொழிற்சாலை ஊழியரான சோனும்குமார் சவுகானுக்கு ஏப்ரல் 15ம் திகதி சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலத்தின் மகாராஸ்குஞ்சில் திருமணம் நடைபெறவிருந்தது.
பஞ்சாப்பில் உள்ள லூதியானா நகரில் பணியாற்றி வந்த சோனும்குமார் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளார். அவரது திருமணம் சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் மகாராஜ்குஞ்சில் நடைபெறவிருந்தது.
நண்பர்களுடனான கலந்துரையாடிய சோனும்குமார், 1,000 கிலோமீட்டர் பயணத்தை சைக்கிளில் தொடங்க முடிவு செய்து மூன்று நண்பர்களுடன் பயணத்தை தொடங்கியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டபோது அவர்களின் திட்டம் தோல்வியடைந்தது.
“நாங்கள் வீட்டிற்குச் செல்ல ஒரு வாரம் இரவும் பகலும் சைக்கிள் ஓட்டினோம், ஆனால் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பால்ராம்பூர் மாவட்டத்தில் பிடிபட்டோம்.
அடுத்த 150 கிலோமீட்டர் தூரத்தை நாங்கள் சென்றிருந்தால் நான் இப்போது திருமணம் செய்திருப்பேன், ஆனால் அதிகாரிகள் என்னை மேலும் சைக்கிள் ஓட்ட அனுமதிக்கவில்லை என சோனும்குமார் கூறியுள்ளார்.
பிடிப்பட்ட மணமகன் சோனும்குமார் உட்பட நான்கு பேர் தற்போது அரசாங்க தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். நான்கு நபர்களும் அறிகுறிகளைக் காட்டாவிட்டால் 14 நாட்களில் தனிமைப்படுத்தலில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.