திருமணத்திற்கு பெண்கள் இல்லை! 100 பெண்களுக்கு 113 ஆண்கள்: அல்லல்படும் பிரபல நாடு!!

413

சீனா……..

சீனாவில் திருமணத்திற்கான பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், திருமணம் ஆகாத ஆண்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது.

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது சீனா தான், ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா இந்த முதல் இடத்தை பிடித்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது சீனாவில் திருமணம் ஆகாமல் 3 கோடி ஆண்கள் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சீனாவில் ஆண் குழந்தைகளை பெற்றுக்கொள்ள மக்கள் அதிக விருப்பம் காட்டுவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சமீப ஆண்டுகளாக சீனாவில், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்திருந்தாலும், பாலின இடைவெளி இன்னும் அதிகமாகவே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இது ஒரு நீண்ட கால பிரச்சனையாக உருவெடுக்க வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மேலும், சீனா வெளியிட்டுள்ள தகவல்படி, ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 113.5 ஆண்கள் இருக்கின்றனர். இதன் விளைவாக, திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு 1.2 கோடி குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 6 லட்சம் ஆண் குழந்தைகள் திருமண வயதை எட்டியபின் பெண் கிடைக்காது என நிபுணர்கள் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.