திருமணம் ஆகாமலேயே நடிகை இலியானா தற்போது தாயாகி இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.நடிகை இலியானா பிரபல பாலிவுட் நடிகை. இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்துள்ளார்.இந்தப் படம் மூலம் கோலிவுட் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது இந்தி படங்களில் அதிகமாக நடித்து வருகிறார்.
இந்தி படங்களில் நடித்து வரும் நடிகை இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நிபோனை காதலித்து வருகிறார். இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.நடிகை இலியானா கடந்த டிசம்பர் மாதம் ஆண்ட்ரூவை கணவர் என்று கூறி இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலை பதிவுட்டார்.
இதன் மூலம் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டதாக ஒரு செய்தி பரவியது. இதுபற்றி இலியானா பதில் சொல்லாமல் நழுவினார்.இருவரும் திருமணம் செய்து கொண்டதற்கான அதிகாரப்பூர்வ செய்தி இதுவரை வெளியாகவில்லை. இதை இலியானாவும், அவருடைய காதலரும் இன்னும் உறுதி செய்யவில்லை.