சடலமாக மீட்கப்பட்ட மணமகன்…..
மாத்தளை, சேர ஆற்றில் திருமணத்திற்கு Pre Shoot புகைப்படம் எடுக்க சென்ற மணமகன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் சஞ்ஜய ரத்னசூரிய என்ற 27 வ யதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று புகைப்படம் எடுப்பதற்காக சென்ற போது, மணமகனும் மணமகளும் ஆற்றுக்குள் விழுந்த நிலையில் மணமகள் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனை தேடும் நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுள்ளது. நேற்று மாலை இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த ஜோடி எதிர்வரும் 17ஆம் திகதி திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தது. இவ்வாறான நிலையில் இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.