திருமணத்துக்கு விசித்திரமாக பத்திரிக்கை அச்சடித்து அசத்திய தம்பதி : என்ன எழுதி இருந்தது தெரியுமா?

1341

விசித்திரமாக பத்திரிக்கை

இந்தியாவில் இளம் தம்பதிக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் அவர்களின் திருமண பத்திரிக்கை விசித்திரமாக அச்சடிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் மேங்ளூரை சேர்ந்தவர் பிரவீன். இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஜெயந்தி என்ற பெண்ணுக்கும் வரும் டிசம்பர் 31-ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இருவரும் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து வரும் திருமண பத்திரிக்கை இணையத்தில் வைரலாகியுள்ளது. ஜெயந்தி மற்றும் பிரவீன் ஆகிய இருவருமே இந்திய பிரதமர் மோடியின் விசிறிகள்.

இதையடுத்து அவர்களின் திருமண பத்திரிக்கையில், வரும் 2019ல் நடைபெறும் தேர்தலில் மோடிக்கு நீங்கள் ஓட்டு போடுங்கள், அது தான் எங்கள் திருமணத்துக்கு நீங்கள் தரும் பரிசு என குறிப்பிடப்பட்டுள்ளது. இதோடு மோடி அரசு செய்துள்ள சாதனைகளின் விவரங்களும் அதில் பட்டியலிடப்பட்டுள்ளது. பிரவீன் – ஜெயந்தி திருமணம் மங்களா தேவி கோவிலில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.