திருமணமாகிய மறுநாளே கணவரால் நடந்த கொடூரம் : அதிர்ச்சியடைந்த புதுப்பெண்!!

610

இந்தியா…

இந்திய மாநிலம் குஜராத்தில் வரதட்சணையை காரணம் காட்டி திருமணமான புதுப்பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்ள மணமகன் மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் டானிலிம்டா பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் கடந்த பிப்ரவரியில் அதே பகுதியை சேர்ந்த 25 வயது மணமகனை திருமணம் செய்துள்ளார்.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் அந்த திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் திருமணமான 10 நாட்கள் கழித்து இருவருக்கும் முதலிரவு நடந்துள்ளது.

அதற்கு அடுத்த நாளே கணவரும் அவரது பெற்றோரும் சேர்ந்து வரதட்சணை ஏன் கொண்டு வரவில்லை எனக்கூறி அந்த பெண்ணை தொந்தரவு செய்ய தொடங்கியுள்ளனர்.

இதனிடையே மனைவியுடன் உறவு வைத்துக்கொள்வதையும் மணமகன் நிறுத்தியுள்ளார். மேலும், தன்னுடன் ஒரே கட்டிலில் படுக்கக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

சில நாட்கள் பொறுத்துவந்த அந்த பெண் ஓரிரு இரவுகளில் உறவு வைத்துக்கொள்ளுமாறு கணவனிடம் விரும்பி கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மணமகன் அந்த பெண்ணை அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் திகதி அப்பெண் வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு நடந்ததை கூறி அழுதுள்ளார்.

அதன் பிறகு பெண்ணின் குடும்பத்தினர் மாப்பிள்ளை வீட்டாரை சமரசம் செய்ததுடன், பெண்ணை இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டோம் என்று அவர்கள் உறுதியளித்ததால் மகளை மீண்டும் கணவரின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், மீண்டும் அந்த பெண்ணை தாம்பத்ய உறவுக்கு அனுமதிக்காமல் கணவர் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பெண் டானிலிம்டா மகளிர் காவல் நிலையத்துக்கு வந்து வன்கொடுமை புகார் கொடுத்துவிட்டார்.

அந்த புகாரில் ” திருமணமான உடனேயே, கணவர் மற்றும் மாமனார் வரதட்சணை கொண்டு வரவில்லை என்று தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர் பத்து நாட்கள் கழித்து என் கணவர் என்னுடன் உடலுறவு கொள்வதை நிறுத்திவிட்டார், நாங்கள் எங்கள் படுக்கையறையில் ஒன்றாக இருந்த போதெல்லாம், அவர் என்னுடன் விசித்திரமாக நடந்து கொண்டார்.

நான் உடலுறவு கேட்டபோது, அவர் என்னை மோசமாக அடித்தார். மேலும், எனது தோற்றம் பிடிக்கவில்லை என்றும் அவர் வேறு சில பெண்ணுடன் உடலுறவு கொள்வதாகவும் கூறினார்” என்றும் அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரை அடுத்து பொலிஸார் பெண்ணின் கணவர் மற்றும் மாமனார், மாமியாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.