ஈரோடு…….
ஈரோடு மாவட்டம் சித்தோடு ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிருந்தா. பிருந்தா ஒரே சமயத்தில் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த கார்த்தியையும், சமூக வலைத்தளங்களின் மூலமாக அறிமுகமான திண்டுக்கல்லைச் சேர்ந்த அரவிந்த் என்பவரையும் காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரில், கார்த்தியை பிருந்தா திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணத்துக்கு பின்னரும் பிருந்தாவால் அரவிந்தை மறக்க முடியாமல், தினந்தோறும் அரவிந்துடன் தொடர்ந்து செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்துள்ளார்.
கார்த்திக் நைட் ஷிப்ட் வேலைக்கு செல்லும் நாட்களில், வீட்டிலிருந்து கார்த்திக் சென்ற பிறகு, அரவிந்த்தை அழைத்து, அரவிந்துடன் பிருந்தா தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. இதற்காக அரவிந்த், திண்டுக்கல்லில் இருந்து அடிக்கடி வந்து பிருந்தாவுடன் தனிமையில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிருந்தா கர்ப்பமடைந்தார். தற்போது 4 மாத கர்ப்பிணியான நிலையில், வீட்டில் பிருந்தா மர்ம்மான முறையில் உயிரிழந்து கிடந்தார். தனது மனைவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரின் பேரில்,
பிருந்தாவின் மரணத்தை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், பிருந்தா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
பின்னர், போலீசார், பிருந்தாவின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வந்தனர். பிருந்தாவின் செல்போனை ஆய்வு செய்த போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பிருந்தாவின் முன்னாள் காதலன் அரவிந்த்துடனான தொடர்பு போலீசாருக்கு தெரிய வந்தது. அதன் பின்னர், அரவிந்த்தை விசாரித்ததில், இருவரும் ஒன்றாக இருக்கும் போது ஏற்பட்ட தகராறில் அரவிந்த், பிருந்தாவை கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அரவிந்தை சித்தோடு போலீசார் கைது செய்துள்ளனர்.