புதுமணத்தம்பதி..
தமிழகத்தில் திருமணமான 1 1/2 மாதத்தில் இளம்தம்பதி தூ க்கிட்டு தற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகிலுள்ள மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன். இவருடைய மகன் ஜெயக்குமார் (வயது 24), டிப்ளமோ படித்துள்ளார்.
இவர் அடிக்கடி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லூர் கிராமத்திற்கு சென்று வந்தார். அப்போது அந்த ஊரை சேர்ந்த விஜயா (23) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.
இவர்களது காதல் பற்றி இருவரின் பெற்றோருக்கும் தெரியவர எ திர்ப்பு தெரிவித்துள்ளனர், இதற்கிடையே விஜயாவை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார் ஜெயக்குமார்.
அத்துடன் கோட்டக்கல் கிராமத்தில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளனர், இருப்பினும் தொடர்ந்து பெற்றோர்கள் எ திர்ப்பு தெரிவித்து வந்ததால் மன உளைச்சலில் தவித்துள்ளனர்.
இதனால் வாழவே பிடிக்காமல் நேற்று மதியம் இருவரும் வீ ட்டில் தூ க்கிட்டு தற்கொ லை செய்து கொண்டனர், விவரம் அறிந்து சென்ற பொலிசார் ச டலத்தை கைப்பற்றியதுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.