கேரளாவில் திருமணமான சில நாட்களில் புதுமண தம்பதி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வயனாட் மாவட்டத்தில் உள்ள மக்கியாட் கிராமத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
உமர் (28) என்ற இளைஞருக்கும் பாத்திமா (20) என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் நேற்று வீட்டில் படுகாயங்களுடன் இருவரும் சடலமாக கிடந்தார்கள்.
உமரின் சகோதரர் முனீர் வீட்டில் இரவு தங்கியிருந்த அவர் தாய் ஆயிஷா காலையில் வீட்டுக்கு வந்த போது இருவரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் கொலை நடந்த வீட்டின் அருகில் உள்ள 19 பேரை இதுவரை விசாரித்துள்ளனர்.இது திருட்டுக்காக நடந்த கொலையா அல்லது பழிவாங்க நடந்த கொலையா என இன்னும் தெரியவில்லை.
பாத்திமாவின் சில நகைகள் உடலில் இருந்தாலும், அவரின் வளையல்கள் மற்றும் நெக்லஸ் காணாமல் போயுள்ளது.இது பொலிசுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.