சென்னை….
சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி திவ்யா பாரதி (23). இந்த மாதம் 1ம் தேதி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு விஸ்வநாதனுடன் திவ்யா பாரதிக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் முதல் தளத்திற்கு சென்ற திவ்யா பாரதி நீண்ட நேரமாக கீழே இறங்கி வரவில்லை.
சந்தேகமடைந்த உறவினர்கள் முதல் தளம் சென்று கதவை தட்டி பார்த்தும் திறக்கவில்லை. உடனே உறவினர்கள் அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது சிமெண்ட் ஓட்டின் இரும்பு பைப்பில் புடவையால் தூ.க்.கு.மாட்டி கொண்டு இ.றந்த நிலையில் கிடந்தார். போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் பிடிக்காத காரணத்தால் அவர் த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஸ்வநாதனுக்கு வயது 33 என்பதால் 23 வயதான திவ்யா பாரதிக்கு திருமணத்தில் விருப்பமில்லை என குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக தெரிகிறது.
ஆனால் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது. திருமணத்திற்கு பிறகு விஸ்வநாதனுடன் ஒன்றாக வாழாமல் அவர் ச.ண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து விஸ்வநாதன் விவாகரத்து கேட்டு அவருக்கு நோட்டீஸ் கொடுத்ததால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திவ்யா பாரதி த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.