திருமணமான 4 நாட்களில் கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி: காரணம் என்ன?

817

பீகார் மாநிலத்தில் திருமணமான 4 நாட்களில் கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முகின்பூர் கிராமத்தை சேர்ந்த சிங்கி தேவி – ரவீந்திர சிங் ஆகிய இருவருக்கும் நான்கு நாட்களுக்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், இரவு தூங்க சென்றவர்கள் காலையில் எழுந்திருக்கவில்லை. ரவீந்திர சிங்கின் தாயார் பகவதி குன்வார் கதவை தட்டி உள்ளார்.10 நிமிடம் கழித்து கதவை திறந்து சிங்கி தேவி மட்டும் வந்து உள்ளார். பகவதி உள்ளே சென்று பார்த்த போது ரவீந்திர சிங் ரத்த வெள்ளத்தில் கிடந்து உள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய், தனது மகனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளார், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

கணவரை கொலை செய்த குற்றத்தற்காக சிங்கி தேவியை பொலிசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் தான் மிகுந்த தலைவலியில் இருந்ததால் கணவனை கொலை செய்ததாக சிங்தேவி கூறியதை கேட்டு பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.சிங்தேவிக்கு இதற்கு முன்னர் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.