திருமணமான 7 நாளில் மனைவி செய்த செயல் : நெஞ்சுடைந்து கதறிய கணவர்!!

546

அன்பரசி…

தமிழகத்தில் திருமணமான 7 நாளில் உயிரை மாய்த்து கொண்ட புதுப்பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் எழிலரசன். இவருடைய மகள் அபிநயா என்கிற அன்பரசி (22). டிப்ளமோ படித்துள்ளார். கே.வி.குப்பத்தை அடுத்த மேல்காவனூர் பஜனைகோவில் தெருவைச் சேர்ந்த பெருமாள் என்பவருடைய மகன் ராமராஜன் (31). சென்னை அப்பல்லோ மருத்துவமனை பார்மசியில் வேலை செய்து வருகிறார்.

அபிநயாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அதற்கு தற்போது திருமணம் வேண்டாம் என அபிநயா மறுத்துள்ளார். இதற்கிடையில் அபிநயாவுக்கும்,ராமராஜனுக்கும் 7 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இரண்டு நாட்களுக்கு முன்பு அபிநயா தனது கணவர் ராமராஜனுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு மறுவிருந்துக்கு வந்துள்ளார். நேற்று காலையில் அபிநயாவின் பெற்றோர்கள் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளனர். ராமராஜன் வீட்டில் உள்ள அறையில் இருந்துள்ளார்.

அந்த அறையை அபிநயா வெளிப்புறமாக பூட்டிவிட்டு, வீட்டின் ஹாலில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார். சிறிது நேரத்தில் கடைக்கு சென்றிருந்த அபிநயாவின் பெற்றோர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது அபிநயா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ந்தனர்.

ராமராஜன் இருந்த அறையின் கதவைத் திறந்த போது வெளியில் வந்த அவர் மனைவியின் நிலையை கண்டு அதிர்ச்சியில் பேச்சு வராமல் வாயடைத்து நின்றார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அபிநயாவை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் விரைந்து வந்து அன்பரசி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இது குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் திருமணமாகி 7 நாட்களே ஆவதால் வழக்கு வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு மாற்றப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.