திருவள்ளூர்….
திருவள்ளூர் மெய்யூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரின் 23 வயது மகள் லட்சுமியும், அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தம்மன் என்பவரின் மகன் சின்னராசுவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இதில் இரண்டு முறை கர்ப்பமடைந்த லட்சுமி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் சின்னராசுவுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் லட்சுமி புகார் அளித்தார்.
இதனையடுத்த கடந்த மாதம் 8-ம் தேதி லட்சுமியை திருமணம் செய்த சின்னராசு அன்றே லட்சுமியை விட்டுவிட்டு தலைமறைவானார்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், கணவனின் வீட்டின் முன்பு அமர்ந்து லட்சுமி தர்ணாவில் ஈடுபட்டார்.