திருமணம் செய்து வைக்குமாறு கொடுமைப்படுத்திய குடிகார மகன் : விபரீத முடிவு எடுத்த பெற்றோர்!!

374

கன்னியாகுமரி…..

கன்னியாகுமரி மாவட்டம், நகார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்வஜெயசிங். இவரது மனைவி தங்கம்.

இந்த தம்பதிக்கு சதீஷ் மற்றும் ஜெபின் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சதீஷ்க்கு திருமணம் முடிந்து தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.

இதனால், ஜெபின் மட்டும் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். மதுவுக்கு அடிமையான இவர் தனக்கும் திருமணம் செய்து வைக்கக் கோரி தனது பெற்றோர்களை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார்.இதனால் அவர்கள் கடும் மன உளைச்சலக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்றும் இதேபோல் மகன் ஜெபின் தரகாறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர்கள் மூத்த மகனுக்கு போன் செய்து,”எங்களால் இதற்கு மேல் வாழமுடியாது” என கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளனர்.

இதையடுத்து வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீவைத்துக் கொண்டு தம்பதிகள் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதைக்கு அடிமையான மகனால் பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.