தமிழகத்தில்……..
தமிழகத்தில் பி ச்சை எடுத்த பணத்தில், 8வது முறையாக ரூ.10,000 கொரோனா நிவாரண நிதி வழங்கிய முதியவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
இதுவரை அவர் 80 ஆயிரம் ரூபாய், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது. துாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன் (65). இவர், திருமணம் முடிந்த சில மாதங்களில், குடும்பத்தை பிரிந்து மும்பை சென்றார்.
அங்கு வேலை கிடைக்காததால், பி ச்சை எடுக்க துவங்கினார். ஊருக்கு திரும்பியவரை குடும்பத்தினர் சேர்க்கவில்லை.
பி ச்சை எடுத்து வந்தவருக்கும் அதிகம் பணம் கிடைத்தது, அதில் செலவு போக மீதி பணத்தை, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல மாநிலங்களிலுள்ள பள்ளிகளுக்கு,
மேஜை, நாற்காலிகள் வாங்க வழங்கினார். மும்பையில், 20 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கி ஆச்சரியப்படுத்தினார்.
இவர், மே முதல் பி ச்சை எடுத்து சேமித்த பணம் தலா, 10 ஆயிரம் ரூபாய் வீதம் 7 முறை, மதுரை கலெக்டரிடம், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று எட்டாவது முறையாக, 10 ஆயிரம் ரூபாயை, கலெக்டர் வினய்யிடம் வழங்கியுள்ளார்.