இந்தியாவில்..
இந்தியாவில் திருமணம் முடிந்த 6 மணி நேரத்திற்குள் மணப் பெண் உ.யிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாக பரவி வருவதால், பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக திருமணம் மற்றும் இ.றப்பு நிகழ்வுகளுக்கு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில், பீகார் மாநிலத்தில் கடந்த 8-ஆம் திகதி கொரோனா விதிமுறைகளுடன், ரமேஷ் மற்றும் நிஷா என்பவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களின் மத சடங்குகளுடன் திருமணம் நடைபெற்று முடிந்தது.
திருமணம் முடிந்த சில மணி நேரத்திற்குள், மணப் பெண் நிஷா உடல் குறைவால் சோர்வாக இருந்தார். இதனால் அவர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் மிகவும் ஆ.பத்தான நிலையில் இருப்பதாகவும், வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படியும் கூறியுள்ளனர். அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது நிஷா உ.யிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து 9-ஆம் திகதி காலை அவரது உ.டலுக்கு சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது. திருமணம் முடிந்து சரியாக 6 மணி நேரம் கூட ஆகவில்லையே என்று உறவினர்கள் அவர் இ.றந்த செய்தியை கேட்டு க.தறி அ.ழுதனர்.