ஆண்ட்ரியா..
அட்டகாசமான நடிகையாக வலம் வருபவரில் நம்ம ஆண்ட்ரியாவும் ஒருத்தர். பாடகியாக அறிமுகமாகி இப்போ நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். முதன் முதலில் நடிகர் விக்ரம் பட பாடலான கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் மூலம் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்துள்ளார்.
இவரின் முதல் படமான “பச்சைக்கிளி முத்துச்சரம்” நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இவரின் அடுத்தடுத்த படங்களான ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, அரண்மனை-2, தரமணி போன்ற படங்கள் இவரின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் படங்களாகும்.
பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். ஒரு பிரபலமான கார் கம்பெனிக்கு விளம்பர தூதுவராகவும் இருக்கிறார். எந்நேரமும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் பல்வேறு கருத்துக்களை ரசிகர்களிடம் பகிரக்கூடிய ஒரு நல்ல பெண்மணி.
இந்த நிலையில் ஒரு ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் அடுத்த படம் ஆக்ஷன் படமா இருக்குமோ என ஆராய்கின்றனர்.
View this post on Instagram