தூக்கில் தொங்கிய மகனை பார்த்து நிலைகுலைந்த தாய் : இளைய மகனுடன் எடுத்த விபரீத முடிவு!!

372

மதுரை….

மதுரை மாவட்டம், கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி பஞ்சவர்ணம். இந்த தம்பதிக்கு விக்னேஷ், மணி என்ற இரண்டு மகன்களும், ஒரு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று வேலை முடித்துவிட்டு தாயும், அவரது இளைய மகன் மணியும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது மூத்த மகன் தூக்கில் தொங்கி இறந்து இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் மகன் இறப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தாயும், இளைய மகனும் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டார் கதவை உடைத்துச் சென்று அவர்கள் இருவரையும் மீட்டனர்.

இதையடுத்து அவர்களைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து மூத்த மகன் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூத்த மகன் தற்கொலை செய்து கொண்டதால், தாய் மற்றும் இளைய மகன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.