தூங்கிய மனைவியின் நடு மண்டையில் கிரைண்டர் கல்லை போட்டு துடிதுடிக்க கொலை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

383

ராமநாதபுரம்…..

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை அடுத்த அடஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தபொன்னையா மகன் லாடமுருகன் (41). மீன்பிடி கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி (35).

இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தையும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு அடிக்கடி வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனால் கணவருக்கும், மனைவி முத்துலட்சுமிக்கும் (35) அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அக்கம் பக்கத்தினர் சமரசம் செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருத்த மனைவி முத்துலட்சுமியின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டுள்ளார்.

இதில், மனைவி ரத்த வெள்ளத்தில் துடிதடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, சிறிது நேரத்துக்குப் பிறகு தானும் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கணவன்,

மனைவி ஆகிய இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.