திருப்பத்தூர்….
தமிழகத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர் தென் கொரிய நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து தமிழக பாரம்பரிய முறைப்படி கரம் பிடித்துள்ளார்.
எரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு தென் கொரியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணி புரியும் பிரவீன் குமார்.
இவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளை குட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டியன்-செல்வராணி தம்பதியினரின் மகன் ஆவார்.
உதவி மேலாளராக பணிபுரியும் பிரவீன் குமார் தென்கொரியா நாட்டை சேர்ந்த சேங்வாமுன் என்ற பெண்ணை 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் வாணியம்பாடி-க்கு அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து இருவீட்டார் சம்மதத்துடன் தமிழ் கலாச்சாரப்படி மந்திரங்கள் முழங்க திருமணம் நடைபெற்றது.
இதில் பெற்றோர்கள், உறவினர்கள், மற்றும் நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டு திருமண தம்பதிகளை வாழ்த்தினர்.