தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

744

தண்ணீர்..

தண்ணீர் குடிப்பது உடலுக்கு அதிகம் நன்மை தரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

பொதுவாக, நம் உடலுக்குத் தண்ணீர் தேவையெனில், தாகம் எடுத்து நம்மிடம் கேட்கும். அப்போது குடித்தால் போதுமானது. லிட்டர் லிட்டராக குடிக்கத் தேவையில்லை.

தாகமே எடுப்பதில்லை என்பவர்களுக்கு, கபம் அதிகமாகிறது என்று அர்த்தம். அதேபோல, அதிக தாகம் எடுப்பவர்களுக்கு பித்தம் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.

உடல் தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால், செரிமானப் பிரச்னை நிச்சயம் வரும். காரணம், வயிற்றில் செரிமானம் நடப்பது அக்னியால். அதிகமான தண்ணீர் அந்த அக்னியை அணைக்கும்போது, அது தடைப்படும்.

தாகம் எடுத்தும் தண்ணீர் அருந்தாமல் தவிர்க்கிறவர்களுக்கு, நீர்ச்சத்துக் குறைந்து, சரும வறட்சி, சுருக்கம், முடி உதிர்வு, கருவளையம், காலில் வெடிப்பு போன்றவை ஏற்படும்.

காலையில் எழுந்ததும் ஒரு குவளை தண்ணீர் குடித்த பின்னரே காலைக் கடமைகளை முடிக்கப் பழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கு, அவர்களின் உடலில் கழிவை வெளியேற்றும் வாயு உற்பத்தி நின்றுவிட்டது என்று அர்த்தம்.

தானாக நடக்க வேண்டிய விஷயத்தை தண்ணீர் குடித்துதான் தூண்ட வேண்டும் என்றால், உடலில் பிரச்னை என்றே அர்த்தம்.