தொகுப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு ஸ்டைல் உள்ளது. அதில் தொகுப்பாளர் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும், பேச வேண்டும் என்ற அடையாளத்தை மாற்றியவர் என்றால் அது ரியோ ராஜ்.
இவர் பிரபல பாடல் இசை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய ஸ்டைல் அனைவருக்குமே தெரியும். மிகவும் காமெடியாக இருக்கும், அவரின் நிகழ்ச்சிக்கு போன் செய்து பேச வேண்டும் என்று விரும்பியதில் பெண்கள் அதிகம் என்றே கூறலாம்.
சமீபத்தில் இருக்கு சிறந்த ஆண் தொகுப்பாளருக்காக விருது கிடைத்தது. அப்போது நடிகரும், தொகுப்பாளருமான தீபக், இப்படியும் ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்கலாம் என்று புது ஸ்டைலை உருவாக்கிய ரியோவிற்கு என்னுடைய பரிசு என்று ஒரு வாட்சு கொடுத்துள்ளார்.இந்த தகவலை ரியோவே தன்னுடைய சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.