பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தாண்டி ரசிகர்களை கவர்ந்தவர் என்றால் தொகுப்பாளினி பிரியங்கா தான்.
ஒவ்வொரு நிகழ்ச்சியில் கலகலப்பாக ஏதாவது ஒரு விஷயம் செய்து மக்களை சிரிக்க வைப்பார்.அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் அவர் சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் பாட அரங்கமே அதிர்ந்துள்ளது.
அவர் பாடி முடித்ததும் பென்னி தயால், உன்னி கிருஷ்ணன், ஸ்வேதா, அனுராதா என அனைவரும் மேடை வந்து பிரியங்காவை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தனர். இவ்வளவு அழகாக பாடுகிறாரே என போட்டியாளர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு பலத்த கைத்தட்டல் கொடுத்துள்ளனர்.