தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அரவிந்த் சாமி. தற்போது படங்களில் மிக முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார். இவர் மற்றும் அமலா பாலின் நடிப்பில் நேற்று பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வெளியாக இருந்தது.
ஆனால் திடீரென ரிலீஸ் நிறுத்தப்பட்டது. ஏற்கனவே ஸ்டிரைக்கிற்கு பிறகு இப்படம் மே மாதத்தின் முதல் வெள்ளிகிழமையே வரவிருந்தது. ஆனால் தள்ளிவைத்தார்கள்.
இந்நிலையில் மே 11 என உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அரவிந்த் சாமி அவரின் ட்விட்டர் பக்கத்தில் படம் வெளியாகாது என கூறியிருந்தார். இதனால் முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி.
எனவே அவர் இதுபோன்று நடக்கும் என நினைக்கவில்லை. என்ன காரணம் என தெரியவில்லை. ரசிகர்களுக்கு மட்டுமல்ல என எனக்கும் வருத்தமும் ஏமாற்றமுமாக இருக்கிறது.
இனி ஒருபோதும் படம் வெளியீடு தேதியை நான் சொல்ல மாட்டேன். ஆனால் படம் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்கும் படியாக இருக்கும் என கூறியுள்ளார்.