தோட்டத்து வீட்டில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை : நீடிக்கும் மர்மம்!!

324

ஆண்டிப்பட்டி…

ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அனுரத்திகா ஸ்ரீநிதி.

இவர், தோட்டத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் வெகு நேரமாக வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் தோட்டத்தில் உள்ள வீட்டில் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது வீட்டின் உட்புறம் கதவு பூட்டப்பட்டு இருந்த நிலையில், உள்ளே அனுரத்திகா ஸ்ரீநிதி தூக்கில் தொங்கியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இறந்த பெண்ணின் சாவில் மர்மம் உள்ளதாக கூறி அவரது உறவினர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.