மகன்..
இந்தியாவில் தந்தையின் சடலத்தை செல்போனில் பார்த்த மகன் மாரடைப்பால் உ யிரிழந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை சேர்ந்தவர் அஞ்சநேய நாயுடு (78). இவர் மகன் பாபு நாயுடு (50) தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் அஞ்சநேய நாயுடு உடல்நலக்குறைவால் உ யிரிழந்தார். இந்த தகவல் அவர் மகன் பாபுவுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய பெங்களூரில் இருந்து காரில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது வழியில் பாபு வாகனத்தை நிறுத்திய பொலிசார் எங்கு செல்கிறீர்கள் என கேட்டதற்கு தந்தை இறந்த செய்தி குறித்து கூறினார். பின்னர் அதை ஆதாரமாக காட்ட உறவினருக்கு போன் செய்து தந்தையின் சடலத்தை போட்டோ எடுத்து அனுப்ப சொன்னார்.
இதையடுத்து செல்போனில் தனது தந்தையின் சடலத்தை பார்த்த போது பாபுவுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு கீழே சுருண்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பொலிசார் பாபுவை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாபு ஏற்கனவே உ யிரிழந்துவிட்டதாக கூறினார்கள். தந்தையும், மகனும் அடுத்தடுத்து உ யிரிழந்த சம்பவம் அவர்களின் உறவினர்களையும், நண்பர்களையும் சோ த்தில் ஆழ்த்தியுள்ளது.