நடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

726

திரைப்பட நடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பின் விபரம் தெரியவந்துள்ளது.தீவிர அரசியலில் இறங்க முடிவு செய்துள்ள கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் திகதி ராமேஷ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார்.ரசிகர்கள் மத்தியில் சமீபத்தில் பேசிய அவர், நமது இலக்கு கஜானாவை நோக்கில் இல்லை என்று கூறியுள்ளார். இப்படிப்பட்ட கமல்ஹாசனின் சொத்து மதிப்பு விபரங்கள் குறித்து தெரியவந்துள்ளது.

கோலிவுட் மட்டும் இல்லாமல் டோலிவுட், பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வரும் கமல்ஹாசனின் நிகரச் சொத்து மதிப்பு 18 மில்லியன் டொலர், அதாவது 140 கோடி ரூபாயாகும்.கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமல்ஹாசன் 40 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற்றுள்ளார் என்று தரவுகள் கூறுகின்றன.

இவர் 30 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.கமல்ஹாசன் இன்னோவா, ஆடி, ஹம்மர் மற்றும் லிமோயூசினி என 4 ஆடம்பர கார்களைப் பயன்படுத்தி வருகிறார்.ஆண்டுக்கு 6 கோடி ரூபாய் வரை வருமான வரி செலுத்தி வரும் கமல்ஹாசனுக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் 30 கோடி ரூபாய் மதிப்பில் சொந்த வீடு உள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் 15 முதல் 18 கோடி ரூபாய் வரை சம்பளமாகப் பெற்றுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.கமல்ஹாசனுக்கு ஸ்ருதி ஹாசன், அக்‌ஷராஹாசன் என இரண்டு மகள்கள் உள்ள நிலையில் அவர்களும் திரைப்படங்கள் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.