நடிகர் பிரபுவின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

1205

இளையதிலகம் நடிகர் பிரபு 90களில் முன்னனி நடிகராக திகழ்ந்தவர். சின்னதம்பி, அஞ்சலி, குரு சிஷ்யன் என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.

இவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்க்கலாம். சென்னையில் நடிகர் சிவாஜிகணேசனுக்கு மகனாக 1956ம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.

பெங்களூரில் பள்ளிப்படிப்பினை முடித்த பிரபு நடிப்பில் மீது ஆர்வம் கொண்டதால் அவரது மாமா வி.சி. சண்முகத்துடன் சேர்ந்து நடிப்பதற்கு கற்றுக்கொண்டார்.

இவரது நடிப்பினை அவதானித்த சிவாஜி 1982ம் ஆண்டு சங்கிலி என்ற படத்தில் அறிமுகப்படுத்தி தன்னுடன் நடிக்க வைத்தார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பல விருதுகளை வென்ற இவருக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என்று இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.

சென்னையில் இருக்கும் இவரது வீட்டின் மதிப்பு 5 கோடியிலிருந்து 7 கோடி வரை இருக்குமாம். இந்த வீடு மட்டுமின்றி கோயமுத்தூர், டெல்லி என பல இடங்களில் சொந்தமாக இவர் கட்டியிருக்கிறாராம்.

இவர் பல கோடி மதிப்புள்ள கார்களை மட்டுமின்றி தனது அப்பா தொடங்கிய சிவாஜி புரொடக்ஷன் என்ற கம்பெனியையும் நடத்தி வருகிறார். சென்னையில் கல்யாண மண்டபம், மல்டி காம்ப்ளக்ஸ் என பல கட்டிடங்களையும் வைத்திருக்கிறாராம்.

அதுமட்டுமின்றி விளம்பங்களிலிருந்தும் இவர் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறாராம். சினிமாத் துறையில் அதிக வருமானவரி கட்டுபவர்களில் பிரபுவும் ஒருத்தராம். ஆக மொத்தம் இவரது சொத்து மதிப்பு 120 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.