நடிகர் விஜய்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்துவருகிறார். சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாகவும், விஜய்யின் ரசிகர்கள் இயக்கும் மக்கள் இயக்கம் தொடரும் என்று விஜய் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் வீட்டிற்கு அவரை சந்திக்க இயக்குநரும் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபாவும் சென்றுள்ளதாகவும்.
விஜய் தாயாரை மட்டும் கூப்பிட்டு விட்டு தந்தையை வெளியில் இருக்கவைத்ததாகவும், அம்மாவை காக்க வைத்து அனுப்பி விட்டதாகவும் ஒரு வார பத்திரிக்கையில் செய்திகாக வெளியிட்டுள்ளனர்.
இதனை மறுப்பு தெரிவிக்கும் படியாக இயக்குநர் சந்திரசேகர் தற்போது வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், பேட்டியொன்றில் நான் கூறியது வந்துள்ளது. ஆனால், என் குடும்பத்தை பற்றி கேட்கும் போது நான் சொல்லாதை குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
நானும் ஷோபாவுன் விஜய் வீட்டிற்கு சென்றபோது நான் காரில் காத்து இருந்ததாகவும் ஷோபா வீட்டிற்கு அழைக்கப்பட்டு இருவரும் அனுப்பப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் எனக்கும் விஜய்க்கும் தற்போது பிரச்சனை இருக்கிறது உண்மைத்தான்.
ஆனால் அம்மாவுக்கும் விஜய்க்கும் எந்த மன கசப்பும் இல்லை, அவரை அப்படி காத்திருக்க வைக்கவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
அப்பா மகனுக்கு இடையில் கடவுளாலும் NO ENTRY போடா முடியாது 😀 @actorvijay@SunTV @sunnewstamil @polimer88 @BBCBreaking @bbctamil @News18TamilNadu @news7tamil @galattadotcom @behindwoods @igtamil @PTTVOnlineNews @vikatan @maalaimalar @toptamilnews pic.twitter.com/DStU9b9C2h
— S A Chandrasekhar (@Dir_SAC) September 28, 2021