90களில் கலக்கிவந்த பல நடிகைகள் சினிமா பக்கமே வராமல் இருக்கிறார்கள். ஆனால் சிலர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சின்னத்திரையில் கலக்குகிறார்கள். அப்படி நிறைய நடிகைகளை கூறலாம்.
சமீபத்தில் நடிகை கௌசல்யா விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற செய்திகள் வந்தன. ஆனால் அந்த செய்தியை உடனே மறுத்தார் நடிகை, அப்படி ஒரு விஷயம் நடந்தால் கண்டிப்பாக அறிவிப்பேன் என்றார்.
இந்த நேரத்தில் நடிகை யுவஸ்ரீ அவர்கள் தன்னுடைய 40வது வயதில் திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நான் சீரியல் நிறைய நடித்துவிட்டேன். இப்போது பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் நடிக்கிறேன்.
எனது திருமணம் குறித்து கேட்கிறார்கள், திருமண வயதில் வரன் அமையவில்லை, பிறகு வயது ஆகிவிட்டது. இதுதான் என்னுடைய வாழ்க்கை 40 வயதில் திருமணம் தேவையா என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகிறேன் என்று பேசியுள்ளார்.