புதுடெல்லி…
தங்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் காதலர்கள் மீது பெண் வீட்டார் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் தங்களின் திருமணத்தை காவல்நிலையத்தில் பதிவு செய்ய வந்தபோது புதுமாப்பிள்ளையை நடுரோட்டில் பிடித்து அடித்து அவரின் ஆணுறுப்பை அறுத்து இருக்கிறார்கள் பெண்வீட்டார்.
ஆபத்தான நிலையில் அந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . புதுடெல்லியில் தான் இப்படி ஒரு கொடூரம் நடந்து இருக்கிறது.
அந்த இளைஞரும் இளம்பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். அவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. எதிர்ப்பை மீறி இரண்டு பேரும் பதிவுத் திருமணம் செய்துள்ளனர்.
இதை அடுத்து ரஜவ்ரி பூங்கா காவல்நிலையத்தில் திருமணம் தொடர்பான தகவல்களை பதிவு செய்வதற்காக தம்பதிகள் இருவரும் சென்று இருக்கிறார்கள். இவர்கள் வருவதை அறிந்த பெண் வீட்டார் காவல் நிலையம் அருகே காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது காவல் நிலையத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு வெளியே வந்த மணமகனை தூக்கிக்கொண்டு சென்று கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பெண்வீட்டார் உச்சகட்டமாக அந்த இளைஞரின் ஆணுறுப்பை அறுத்து இருக்கிறார்கள். இதில் ஆபத்தான நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அந்த இளைஞர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெண் வீட்டாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.