இந்தியா…….
இந்தியாவில் விமான பயணத்தின் போது பயணி ஒருவர், அவசரகால கதவை திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியிலிருந்து வாரணாசிக்கு பயணித்த ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, டெல்லியிலிருந்து வாரணாசிக்கு புறப்பட்ட விமானத்தில் பயணிகள் பயணித்துக்கொண்டிருந்து போது, நடுவானில் நபர் ஒருவர் திடீரென ஆக்ரோஷமாக அவசரகால கதவை திறக்க முயன்றார்.
பயணிகளின் உதவியுடன் விமானக்குழுவினர் அந்த நபர் கட்டுப்படுத்தினர். விமானகுழுவினர் உடனடியாக சம்பவம் குறித்து விமானிக்கு தகவலளித்தனர், அவர் தரையிறக்க முன்னுரிமை வேண்டும் என வாரணாசி விமான கட்டுப்பாட்டு அறைக்கு கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, விமானம் பாதுகாப்பு வாரணாசியில் தரையிறங்கியது. இதனையடுத்து, ஸ்பைஸ்ஜெட் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் அந்த பயணியை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர் என ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.