நண்பனை கொன்று துண்டு துண்டாக வெட்டிய இளைஞர்: சிக்க வைத்த மொபைல் எண்!!

776

ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் மது போதையில் தமது நண்பரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் உடல் பாகங்களை மறைவு செய்த பை ஒன்றில் மொபைல் எண் எழுதி இருந்ததால் அந்த நபர் பொலிசில் சிக்கியுள்ளார்.

ரஷ்யாவின் ஊலான் உட் பகுதியில் 27 வயது நபரும் அவரது நண்பரும் இணைந்து மது அருந்தியுள்ளனர்.

மது போதையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் குறித்த 27 வயது நபர் தமது நண்பரை அடித்தே கொலை செய்துள்ளார்.

பின்னர் கொலை வழக்கில் இருந்து தப்பிக்கும் பொருட்டு, நண்பரின் உடலை துண்டு துண்டாக வெட்டி சுமார் 3 மாத காலமாக எவருக்கும் தெரியாமல் தெருவோரம் இருக்கும் குப்பைத் தொட்டியில் கொண்டு வீசி வந்துள்ளார்.

எஞ்சியுள்ள உடல் பாகங்களை தனது குடியிருப்பின் மொட்டை மாடியில் மறைவு செய்துள்ளார்.

இந்த நிலையில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட உடல் பாகங்கள் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் கிடைக்கவே, பொலிசார் சுயமாகவே விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

அதில் தலையை பொதிந்து வீசிய பையில் எழுதப்பட்டிருந்த மொபைல் எண் தொடர்பில் பொலிசார் ,மேற்கொண்ட விசாரணையில் உண்மையான குற்றவாளி எவர் என கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த நபரின் குடியிருப்புக்கே சென்ற பொலிசார், மொட்டை மாடியில் எஞ்சிய உடல் பாகங்களையும் கண்டு பிடித்துள்ளனர். தொடர்ந்து குறித்த 27 வயது இளைஞனை கைது செய்த பொலிசார், அவர் மீது கொலை வழக்கு பதிந்துள்ளனர்.