நதி பட வெற்றி : வாரிசு நடிகை மேல் கோபத்தில் நடிகைகள் : பொங்கியெழுந்த ஆயிரத்தில் ஒருத்தி!!

837

மறைந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு தொடர்பான படத்தில் நாயகியாக நடித்த வாரிசு நடிகை மீது மற்ற நடிகைகள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். காரணம், படத்தில் நடிகையின் நடிப்பை ஆளாளுக்கு கிலோ கணக்கில் புகழ்வது தான்.

ஆரம்பத்தில் ‘நீ இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட’ என இந்தப் படவாய்ப்பு குறித்து நடிகையை அனைவரும் கலாய்த்தனர். ஆனால், அவர்கள் அனைவரின் கேலியையும், சவாலாக எடுத்துக் கொண்டு படத்தில் பழம்பெரும் நடிகையை அப்படியே தனது நடிப்பில் கொண்டு வந்தார் வாரிசு.

இதனால் உலக நாயகன் முதற்கொண்டு பலரும் நடிகையின் நடிப்பை ஆஹா, ஓஹோ எனப் புகழ்ந்து வருகின்றனர். இதனால் மற்ற நடிகைகள் எல்லாம் கோபத்தின் உச்சியில் இருக்கிறார்களாம். பலரும் தங்கள் மனதிற்குள் புலம்பிக் கொண்டிருக்க, ஆயிரத்தில் ஒருத்தியான முத்துச்சரம் நடிகையோ மதுபோதையில் மற்றவர்கள் காதுபடவே பப்பில் புலம்பியிருக்கிறார்.

‘நாங்கலாம் நடிக்கலையா, அவ மட்டும் என்ன பெரிய இதா’ என வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவிற்கு கெட்ட கெட்ட வார்த்தைகளால் வாரிசு நடிகையை அவர் பாராட்டியதைக் கேட்டு அங்கிருந்த பலருக்கு காது கருகிப் போய் விட்டதாம்.

கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட நடிகையின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது என்பதை ஏன் இவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்களோ?