சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்துள்ள தியா படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘லஷ்மி’ படத்தின் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் விஜய். தற்போது இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து இறுதிகட்ட வேலைகள் நடைபெறுகின்றன.
இப்படத்தை அடுத்து இரண்டுக்கு மேற்பட்ட புதிய படங்களை திட்டமிட்டு வைத்திருக்கும் இயக்குநர் விஜய், நடிகை நயன்தாரா நடிப்பில் முழு நீள நாயகி கதை ஒன்றையும் சொல்லி, அவரது கால்ஷீட்டையும் பெற்றிருக்கிறார்.
இப்படத்துக்கு நயன்தாராவின் சம்பளம் 5 கோடி என்று கோலிவுட்டின் சம்பள பட்ஜெட் குழுவினர் தெரிவிக்கின்றனர்.