நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோருக்கு நடந்த விபரீதம்!!

318

ராஜஸ்தான்..

போதைக்கு அடிமையான மகனை திருத்தும் முயற்சியில் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள் பெற்றோர்.

அங்கிருந்த மகன் திரும்பி வந்து மீண்டும் போதைக்கு அடிமையானதால் கவலையில் இருந்திருக்கிறார்கள் பெற்றோர். இதனால் தன்னை மீண்டும் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி விடுவார்களோ என்ற பயத்தில் பெற்றோரை கோடாரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்திருக்கிறார் மகன்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஹனுமங்கர் நகர் பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுவன் போதைக்கு அடிமையாகி குடும்பத்திற்கு மிகுந்த தொந்தரவை ஏற்படுத்தி வந்திருக்கிறார். தன் மகனை எப்படியாவது போதைப் பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும் என்று நினைத்த பெற்றோர் அச்சிறுவனை மறுவாழ்வு மையத்தில் சேர்த்திருக்கிறார்கள்.

சில நாட்கள் கழித்து அச்சிறுவன் மறுவாழ்வு மையத்திலிருந்து கிராமத்திற்கு வந்திருக்கிறார். மீண்டும் அவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். இதனால் மீண்டும் தன்னை மறுவாழ்வு மையத்தில் கொண்டு போய் சேர்த்து விடுவார்களோ என்று நினைத்து அச்சத்திலேயே இருந்திருக்கிறார் அச்சிறுவன்.

போதையில் இருந்த சிறுவன் தூங்கிக்கொண்டிருந்த பெற்றோரை கோடரியால் வெட்டி கொலை செய்திருக்கிறார்.

இதை பார்த்துவிட்டு தடுக்க வந்த சகோதரனையும் கடுமையாக தாக்கி தள்ளியிருக்கிறார்.

பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட கோடரியுடன் வீட்டிற்கு வெளியே சென்று பெற்றோரை கொலை செய்துவிட்டதை கிராமத்தினரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

கிராமத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்கள் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.