நாகர்ஜுனா குடும்பத்தில் இணையும் மற்றொரு இளம் நடிகை.. விரைவில் திருமணம்! யார் தெரியுமா?

67

நாக சைதன்யா – சோபிதா..

இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் சோபிதாவிற்கு சமீபத்தில் தான், நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.

அடுத்த மாதம் இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் நிலையில், தற்போது நாகர்ஜூனாவின் குடும்பத்தில் மற்றொரு இளம் நடிகையும் இணையப்போகிறார் என தகவல் வெளிவந்துள்ளது.

நாகர்ஜூனாவின் உறவினர்களில் ஒருவர் நடிகர் அக்கினேனி சுஷாந்த். இவர் நடிகை மீனாட்சி சவுத்ரியை திருமணம் செய்துகொள்ள போவதாக தெலுங்கு திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாகவும், இதுகுறித்து அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறுகின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.