நாக்கை அறுத்துக் கொண்ட கணவன் : துண்டான நாக்குடன் பதறியபடி மருத்துவமனைக்கு வந்த மனைவி!!

235

தமிழகத்தில்..

தமிழகத்தில் மன உளைச்சலில் இருந்த கணவன் தனது நாக்கை அறுத்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வசித்து வருபவர் முருகேசன். இவர் சிறிது மன நலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.

சில நாட்களாக யாரிடமும் பேசாமல் தனிமையிலேயே இருந்த முருகேசன், மன உளைச்சல் காரணமாக தனது நாக்கை கத்தியால் வெட்டிக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த முருகேசனின் மனைவியும், மகளும் துண்டான நாக்கை கவரில் எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் துண்டான நாக்கில் இரத்த ஓட்டம் இல்லாததால் மீண்டும் இணைக்க முடியாது என தெரிவித்தனர்.

மேலும் தெளிவான உச்சரிப்பு இல்லாமல் ஓரளவுக்கு மட்டுமே முருகேசனால் இனிமேல் பேச இயலும் என தெரிவித்தனர். தொடர்ந்து முருகேசனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.