இளைஞன்..
கொரோனா பரவலை தடுப்பதற்காக இளைஞன் ஒருவன் தன்னுடைய நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2000-க்கும் மேற்பட்டோர் இந்த நோயில் இருந்து மீண்டுள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக நாட்டில் வரும் 3-ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த ஊரடங்கின் காரணமாக வெளி மாநிலத்துக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் இருக்கும் பவானி மாதா கோவிலில் சிற்ப பணிகளில் சிலர் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தொழிலாளர்களில் ஒருவர் விவேக், இவர் மத்திய பிரதேச மாநிலதைச் சேர்ந்தவர். இவர் கடந்த சனிக்கிழமை தனது சக நண்பர்களிடம் சந்தைக்கு சென்று வருவதாகக் கூறி அங்கிருக்கும் நாதேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் நாக்கு அறுபட்ட நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து உடனடியாக கோவில் பூசாரி பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கு விரைந்து வந்த பொலிசார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக விவேக் தன்னுடைய நாக்கை அம்மனுக்கு காணிக்கையாக கொடுக்க வேண்டிக்கொண்டு இவ்வாறு அறுத்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.